நிராகரிக்கப்பட்ட நான்

மரங்கள் கூட
உதிர்ந்த இலைகளை
புதுப்பித்துக்கொள்வதால்தான்
அவை நந்தவன சோலையிலே
வரவு வைக்கப்படுகின்றன.......

அவனின் வாழ்க்கை
பதிவேட்டிலே என் வரவை
நான் எப்படி
எதிர்பார்க்க முடியும்.....

நான் புதியவளாகவோ..
புதுப்பித்துக் கொள்ளாதவலாகவோ
இல்லாத போது........

கால வெள்ளத்தில் ...
நீந்தி கரை ஏறியவர்களைவிட......
சோர்ந்து கரை ஒதுங்கியவர்களே அதிகம்......!

காலம் ஏந்தி நிற்கும்
பூச்செண்டுகளை வாங்கதெரியாமல்
முள்ளோடு விரல் கிழித்துக்கொண்ட
முட்டாள் நான்.....!

இறைவனிடம் வரம்
கேட்கிறேன் .........
அவனோ அனுதாபங்களை
மட்டுமே அனுப்புகிறான்....!


புளித்துப்போன நானும்
சலித்துப்போன என் சங்கதிகளும்
அவனின் புதுப்பிக்க பட்ட வாழ்க்கையிலே
மரியாதை குறைவாய் நடத்தப்படுகின்றன.....

வீசும் தென்றலும்
எனை தொட்டு செல்லாமல்
விட்டு சென்றது....
நான் தீண்ட தகாதவள்
என்பதாலோ......

நானும் இருந்திருப்பேன் புதிதாக......
நீ தொடாமல்....... கை படாமல்,
நீ கொடாமல்.... நான் பெறாமல்
நான் இசையாமல், அசையாமல்
இருந்திருந்தால்......!

இன்று ஓய்ந்து
தேய்ந்து....
உயிர் உருகி
ஊன் மருகி...
செல்லாக்காசாய் நான்......

ஏங்கிய விழிகள்
தூங்கிய போதும்
ரத்தம் வழிகின்றன......!

என் இரவுகலெல்லாம்
ஏளனம் செய்கின்றன.....
என் கனவுகளெல்லாம் கருகிவிடுகின்றன
எரி நட்சத்திரங்களாய்....

நடை பாதியில்
தடை பட்டு நடக்கிறது
என் ஜீவன்....!

கனவுகளில் மூழ்கி....
கற்பனையில் நீந்தி.....
கவிதை அரங்கேறும்
என் நினைவுகள்.....
கல்லறையின் விலாசம் தேடுகின்றன.........
கண்ணீருடன்.......!

விழித்திருக்கும் வரைதான்
விடியல் என்பது
புதுப்பிக்கப்பட்ட யுகத்தின் தத்துவம்....
இதை உணர்ந்தவனுக்குத்தான்
இப்பூவுலகில் தனித்துவம்.....!

இல்லையேல்........
பலரது மரண ஓலங்கள் கூட
இங்கே மௌன ராகங்கள் தான்.......





DEAR WOMENS PLEASE UPDATE YOURSELF.....
THIS IS YOUR LIFE...
YOU ONLY THE RESPONSIBLE.....



*************VIDHYA*****************************


i

எழுதியவர் : vidhya....... (20-Feb-14, 5:15 pm)
பார்வை : 267

மேலே