காதல்

அலைப்பேசி வழியாக
கேட்டதுமே உன்குரலை
மலைவாசி ஆகின்றேன்
கெட்டதுவே என்நிலைமை

மடிகணினி வழியாக
கண்டதுமே உன்அழகை
கொடித்துணியாய் ஆகிவிட்டேன்
வெய்யிலிலே காய்ந்து

செய்கின்றாய் யுத்தம்
கலங்கிடுதே சித்தம்
வந்திடுவாய் பெண்ணே
சிந்திடு வாய் தேனே!

எழுதியவர் : உமர்ஷெரிப் (21-Feb-14, 1:29 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 77

மேலே