சாபம்-14

மனோகரனும், அசோக்கும் அந்த "ஸ்வர்ண காட்"டிற்கு செல்ல ஆயத்தமானார்கள்

மனோகர் தன் அடுத்த கதைக்காக செல்வதாக காவல் துறையிடமும் வன துறையிடமும் அனுமதி வாங்கி கொண்டார் .

அசோக் தன் வேலைக்கு ஒரு மாத காலம் விடுப்பு தெரிவித்து விட்டு கிளம்பி வந்து கொண்டிருந்தான்


அந்த கிராமம் சேலம் உடையான் பாளையம் அருகில் நெடுஞ்சாலை பிரிவில் இருந்தது

"சார், இது மேல பஸ் போகாது,,, அந்த ஊருக்கு நடந்து தான் போகணும்"- தன் கடமைக்கு சொல்லி சென்றார் நடத்துனர்


மனோகரும், அசோக்கும் இறங்கி நடக்க ஆரம்பித்தனர்

அவர்களை வரவேற்றது "ஸ்வர்ண காடு",,,,சரியான புழுதி மண்,,, அவர்கள் வந்த நேரமோ மதியான நேரம்,,,

சுடெரிக்கும் சூரியன்,,, அதன் வெக்கை,,, எதையும் பொருட் படுத்தாமல் நடக்க ஆரம்பித்தனர் இருவரும்


நான்கு அடி நடந்திருப்பார்கள்,,, மக்களுக்கும் இவர்களுக்கும் வெகுதூரம் ஆனது போல ஒரு நிலை

அந்த அளவிற்கு மயான அமைதி,,,, சுற்றி கருவேல மரங்கள்,,,,,


மெல்லியதாக வீசிய காற்று,,,, மனோகரின் கால் பட்ட சமையம் சூறை காற்றாக மாறியது

அந்த கரிசல் மண் புழுதி காற்றின் வேகத்தில் சுழன்று அவர்களின் முன் பேயாக ஆடியது

"அங்கிள்!!! என்ன அங்கிள் இது இவ்ளோ நேரம் அமைதியா இருந்துச்சு இப்போ திடீர்னு புயல் மாதிரி தெரியுது" --- திணறினான் அசோக்

எதிர் புறம் என்ன உள்ளது என்று அறிய முடியாத அளவிற்கு அந்த புழுதி புயல் கோர தாண்டவம் ஆடியது


அரை மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த இடத்தை கடந்தனர் இருவரும்


கொஞ்சம் தூரம் சென்று திரும்பி பார்த்தனர்,,, அந்த புயல் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது


"ஐயோ!! அசோக் அந்த புயல் நம்ம பின்னாடியே வருது பாரு"

திடிக்கிட்டு திரும்பினான் அசோக்,,,"அட!! ஆமாம் அங்கிள்"

இருவரும் வேகமாக ஓட ஆரம்பித்தனர்,,,, அந்த புயல் விடுவதாக இல்லை,,,,


இருவரும் வேகமாக சென்றனர்,,,, அந்த பரபரப்பில் கல் இடறி கிழே விழுந்தார் மனோகர்,,,,,


அந்த இடத்தில் தன் படத்தை விரித்தபடி பார்த்து கொண்டிருந்தது ஒரு கரு நாகம்!!!!


(விரட்டும்,,,,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (21-Feb-14, 3:14 pm)
பார்வை : 429

மேலே