உள்ளத்தில் உன் நினைவு
உடலில்
உப்போ, சர்க்கரையோ
அதிகமானால்
உணவில் அதனை
குறைக்க சொல்வது
மருத்துவம்!- என்
உள்ளத்தில் உன்
நினைவை குறைக்க
உணவில் நான்
எதை குறைக்கவேண்டும்?
உணவை நிறுத்தினாலும் கூட,
உள்ளத்தில் உன் நினைவு
நின்றபாடில்லை!