செந்தமிழ்ப் பாவை

மொழிகளுக்கெல்லாம் தலைவியாம்
எங்கள் தமிழ்......
தரணிக்கெல்லாம் தண்மொழியாம்
திங்கள் தமிழ்.......
உயிர்களுக்கெல்லாம் உணர்வலையாம்
ஓங்கு தமிழ்......
உயிருக்குள் உரைந்த உயிரணுவாம்
பொங்கு தமிழ்......
செவிக்குள் பாய்கிற தேன்துளியாம்
இனிய தமிழ்......
சொல்லாட்சி புரிய வைக்கும்
வண்மைத் தமிழ்......
மலர்களையும் முகிழ வைக்கும்
மென்மைத் தமிழ்......
தனிப்பெரும் செல்வமொழியாம்
தொன்மைத் தமிழ்......
மொழிகளுக்குள் மூத்தவளாம்
பண்டைத் தமிழ்......
பழைமையில் முதிர்ந்தவளாம்
சங்கத் தமிழ்......
புதுமையில் கலந்தவளாம்
இளமைத் தமிழ்......
வானில் பரவும் கதிரொளியாம்
ஒளிரும் தமிழ்......
பூவில் மின்னும் பொன்னொளியாம்
மிளிரும் தமிழ்......
நம் வாழ்வொடு கலந்து விட்ட
மூன்று தமிழ்......
நம் மூச்சோடு இயைந்துவிட்ட
முதன்மைத் தமிழ்.......

எழுதியவர் : கோதை (21-Feb-14, 6:11 pm)
Tanglish : sentamilp paavai
பார்வை : 105

மேலே