உக்கிரம்

விசாரிங்கப்பா!அந்த விக்கிபீடியாவ!!

ஆறாயிரம் வருசந்தானு!
அசால்ட சொல்லிபுட்டாங்கே!!

வீரத்த வெளச்சு
மானத்த நட்டு,

சல்லிகட்டும், சாவகட்டும்
நடத்துன ஊருட நாம!!

ஆனா வேளக்கம் சொல்லுறது
வெள்ளைக்காரன் பாசையில...

செவலைதான்... ஆமா சிவப்பு தான் ஊதகாத்து
ஊரை எழுப்புன.. உருவி சாவதான்....
புலினிரமும், புண்ணாக்கு
தின்னே வளந்த மயில சாவதான்
அழகுதான்... மக்கசனம்

பூலாம் வலசு சாவல் கட்டு
மாருல போட்டு வளர்த்தது தான் ..

மூணு இஞ்சி கத்திய
முண்டுல கட்டி இறக்கிவிட்டு
பாருவே...

செவுணி கிழிஞ்சு செதஞ்சு போகும்..
போட்டிக்கு வந்த
சாவல அப்புறம் பொத்துனமாதிரி
தூக்கிப்போவனும்

ஏரு புடிக்கிற கூட்டமெல்லாம்
எட்டி நின்னு பாக்கும்
ஈராசு மூராசுணு
பேரு வச்சு திரிஞ்ச பயலுவ நாம

ஆட்ட என்னவோ அரமணி நேரந்தான்
அஞ்சு நிமுஷந்தா ஆட்டய
முடிச்சிட்டு போய்கிட்டே இருப்போம்ல..

எழுதியவர் : பிரசன்னா (23-Feb-14, 6:19 pm)
சேர்த்தது : பிரசன்னா
பார்வை : 56

மேலே