உதிராத கண்ணீர்

மலரின் புன்னகை அதன் இதழ்களில்
உவமை கூறுகையில் அத்தனை அழகு .
ஒரு நாள் விடியற் காலை பொழுதில்
உன் தோட்டம் சென்று பார் .
அம்மலர் கூட கண்ணீர் துளிகளுடன்
பனி துளிகளாய் அதன் மீது
மறைக்கிறது அதன் புன்னகையில் அதன்
கண்ணீரை.
மனிதன் மறைக்க முயன்றால் வெளி வந்துவிடும்
பனித்துளி போல .
கண்ணீரை உதிர்த்து விடு.
உன் கவலை தேற்றி விடு .
என்றும் உங்கள்
உமா நிலா