என் சின்ன பூவே என் தோழமையின் கவிதை

என் சின்ன பூவே ...
உன்னை நினைத்து உருகும்
என் இதயம் உன் அருகே
வந்திடவே தவித்து
துடித்திடுமே ....
நீ விட்டு சென்ற
உன் வார்த்தையின் வாசங்கள்
இதயமெல்லாம் மணம் வீசும் .
உன் வார்த்தை பூக்களின்
மென்மை,என் மனத்தினிலே
மெத்தென்று பதிந்து இனிய
தாலாட்டாய் தவழ்கிறதே ..
இனித் திரும்பா பூக்கணங்கள்....
உன்னோடு நானும் நம்
வார்த்தைகளும் ....உன்
பேச்சின் சுகம் கூட
ஒரு நதியாக துள்ளி
பாய்ந்து அலையாக
அடிக்கிறதே ....

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (24-Feb-14, 2:45 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : en sinna poove
பார்வை : 54

மேலே