முடிவுகள்

வெறும் தரையில்
எண்ணி வைத்த
புள்ளிகள்!!!

அந்தி வானில்
செம்மை சேர்க்கும்
மாலை நேர சூரியன்!!!

குழந்தை உணவில்
மீந்து போன
கடைசி இரு பருக்கைகள்!!!

ஒய்ந்து போன
புயலில் வடிந்து நிற்கும்
மரத்தில் துளிகள் !!!!

கடைசி தேர்வின்
முடிவு பக்கத்தில்
முடித்து வைக்கும் வரிகள்!!

உறவின் பிரிவில்
வாசல் தாண்டும்
கடைசி பாதம்!!!

மிக பிடித்த
நாவலின்
கடைசி பக்கம் !!!

உயிர் பிரிவின்
கடைசி
மூச்சு !!!!

காதலின் முறிவில்
கடைசி
கண்ணீர்!!!

இவை எல்லாமே
நீள துடிக்கும்
முடிவுகள் தாம்!!

எழுதியவர் : நிலா மகள் (26-Feb-14, 12:02 pm)
Tanglish : mudivukal
பார்வை : 114

மேலே