இசை

சுகம் பெருகும் சோகம் குறையும்
மனத்தை மயக்கும் இதயத்தை வருடும்

உடல் சிலிர்க்கும் ஊணை உருக்கும்
ஆனந்தம் பிறக்கும் அமைதி நிலவும்
தாயின் தாலாட்டும் இசையே
குழந்தையின் மழலையும் இசையே
இறைவனடி சேர உதவும்
ஏணிப்படிகளும் இசையே

எழுதியவர் : vasanthivijayan (27-Feb-14, 4:53 pm)
Tanglish : isai
பார்வை : 55

மேலே