கலங்காதே மனிதா
பூக்கள் உதிர்ந்ததென
செடிகள் அழுவதில்லை!
மேகம் பிரிந்ததேன
வானம் அழுவதில்லை!
மேனி உருகுதென
மெழுகு அழுவதில்லை!
உளிகள் படுகிறதென
பாறைகள் அழுவதில்லை!
இத்தனையும் நிகழ்ந்தால்தான்
அதற்குச் சிறப்பு !
துன்பமற்ற வாழ்க்கையை
எண்ணியிருந்தால்
சாதிக்கத்தகுதியற்றது
இந்தப் பிறப்பு!!