நீரை கிழித்து வா வெளியே

வெறுங்கை என்பது மூடதனம்
விரல்கள் பத்தும் மூலதனம்!
துரும்பை எடுத்து பார்த்தாலும்
இரும்பாய் ஆக்கும் சக்தி உனக்குண்டு!!

நெஞ்சம் உரம் கொண்டிருந்தால்
மண்டியிடும் மதயானை கூட்டம்!
தன்னலமாக வாழாமல்
தன்னம்பிக்கையோடு வாழ்வை தொடங்கு!!

பிறப்பும் இறப்பும் வெறுமை!
வாழ்வில் வேண்டா வறுமை!
இருப்பதை கொண்டு மனமகிழ்ந்தால்
அது தானே உனக்கு பெருமை!!

தினமும் உதிரும் மலர்போல் நாம்!
இருந்தும் மணம்வீச மறவாதே!
தவறென உன் மனதில் உதித்தால்
மௌனமாயிருக்காதே!!

முரட்டுசிங்கமாய் இருக்காமல்
நரித்தனமுடனே செயலாற்று!
இயற்கை எல்லாம் உனக்காக...
மனச்சிறகை விரித்து பறந்திடு!

போனது போகட்டும் விடு!
ஆகட்டும் பார்க்கலாம் இரு!
மிரட்சியாய் பார்க்காதே வாழ்வை
விழியால் உலகை உற்று
மகிழ்ச்சியாய் விழித்தெழு!

எழுதியவர் : கனகரத்தினம் (28-Feb-14, 12:35 pm)
பார்வை : 264

சிறந்த கவிதைகள்

மேலே