பேதை உள்ளம் துடிக்கிறது

என் நெஞ்சிக்கே உள்ளவரே
எனக்கு மட்டும் உரியவரே
எங்கதான் போனீங்களோ?
ஏங்கி மனம் தவிக்கிறது!

என் கனவெல்லாம் வாரீக
ஏங்க விட்டுப் போரீக
எப்போதான் வருவீங்களோ?
பேதை உள்ளம் துடிக்கிறது!

கொஞ்ச நேரம் வாருங்களேன்
கொஞ்சிப் பேசிச் செல்லுங்களேன்
கொடிய காதல் வேதனையை
குறைக்க மனம் ஏங்குறது!

துணிந்து இங்கே வாருங்களேன்
துயர் துடைத்துச் செல்லுங்களேன்
துணை வேண்டி தவிக்கிறது
துரும்பாய் உடல் இளைக்கிறது!

ஊரவர்கள் கண் படா​மே
ஊசலாட்டம் காட்டா​மே
ஊர் ஒதுங்க வாருங்களேன்
உரைக்கப் பல இருக்கிறது!

நித்திரைதான் இல்லீங்க
நிலை மறந்து சொல்றேங்க
நீண்ட நேரம் பேசிடலாம்
நேரம் அதிகம் இருக்கிறது!

அப்பா உழைக்கப் போயிடுவார்
அம்மா கூட சென்றிடுவார்
அருமை அத்தான் வாருங்களேன்
அன்பை வேண்டித் தவிக்கிறது!

எழுதியவர் : ஜவ்ஹர் (28-Feb-14, 11:48 pm)
பார்வை : 108

மேலே