காவியக் கனவு

விழியாடி... பின் சொல்லாடி ...!
அவள் பின்னாலே நான் ஓடி ..!
கையாடி ....! இதயத்தில் உறவாடி ...!
அதனால் இருவரும் இதழாடி ..! மற்றும்
இடையாடி..இருவரும் கலந்தாடி ...!
இன்பத்தில் விளையாடிப் பின்

காற்றாட போனவள்-கொடுங்
காலனோடு காற்றாகிப் போனாள்
காத்திருந்த எனக்கு தினமும்
கனவில் வந்து - முத்தம் தந்து
கயிற்றில் ஊஞ்சலாடுகிறாள்

கலைக்காதீர்கள் இந்தக் கனவை
காவிய மான வண்ணக் கனவை ..!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (28-Feb-14, 11:50 pm)
Tanglish : kaviyak kanavu
பார்வை : 83

மேலே