கவிஞா

காலமுன் னெதிரிலே கைக்கட்டி நிற்குமே
கவலையு மேனடா – கவிஞா
கலக்கமும் வீணடா !
ஞாலமுன் கருத்தினை நாடியேச் சுற்றுமே
நம்பிக்கை கொள்ளடா – கவிஞா
நயம்படச் சொல்லடா !

வானமுன் கைகளில் வசப்பட லாகுமே
விரித்திடு சிறகையடா – நீ
விசித்திரப் பறவையடா !
மானமே உயிரென மானுடம் சீர்பெற
மாற்றத்தை உருவாக்கடா – கவிஞா
மாக்களைத் திருவாக்கடா !

எழுதியவர் : முல்லைச்செல்வன் (1-Mar-14, 3:29 am)
பார்வை : 77

மேலே