நகைச்சுவைப்பா

காவடிச்சிந்திலிருந்து கொஞ்சம் வேறுபட்ட ஆங்கில லிம்ரிக்கைப்
போல் சில நகைச்சுவைப்பாக்கள்

முயற்சிசெய்து எழுதினேன் ஒரு நகைச்சுவைப்பா
தயவுசெய்து நீயும்கொஞ்சம் நகைச்சு வைப்பா
கண்கள் சிவக்க
மேனி துடிக்க
வேண்டாம் இந்த கோபம் கொஞ்சம் குறைச்சுவைப்பா

நச்சரித்தாய் தினந்தோறும் அடிக்கடிநீ
எச்சரித்து வாங்கித் தந்தார் மடிக்கணினி
முகநூலில் பாய்ந்து
வெகுநேரம் ஆய்ந்து
கிடைத்தவளோ பேரிளம்பெண் பெயர் தரிணி


இருபத்து மூன்றாம் புலிகேசி
பலன் நோக்கியா வாங்கினான் அலைபேசி
விட்ட அழைப்பை
விரும்பி அழைத்தான்
கொட்டித் தீர்த்தான் ஒருபரதேசி

அரசுப்பணி பெற்றுவிட்டேன் கொட்டு முரசு கொட்டு
ஆர்ப்பரித்தான் ஆர்ப்பரித்தான் அம்பத்தூர் கிட்டு
வேலையில் அமர்ந்து
காலையில் விருந்து
அடுத்தநாளும் விருந்து வயது ஐம்பத்து எட்டு

எழுதியவர் : அணைக்கட்டுபாலா (28-Feb-14, 10:33 pm)
சேர்த்தது : anaikattubala
பார்வை : 392

மேலே