என் காதல் காவியமா

தன்னிலை அறியா நிலையில் என்னுள் காதல் மலர்ந்தது அந்த மின்னலை கண்டு,
மலர்ந்த காதல் வளர்ந்திட வில்லை அப்பாவை என் கரம் பற்றும் வரையில்,
ஒருதிங்கள் என் அகம் நுழைந்து பசுந்தங்கம் போல தோன்றினாள்,
மௌனம் பேசி காதல் வளர்த்து மனம் முழுவதும் அவளை நிரப்பினேன்,
மதிமுகத்தை மறுமுறை காண பல திங்கள் காத்திருந்தேன்,
தேன் மலர் நல்கும் பதம் சுவைக்க செவி திறந்து காத்திருந்தேன்,
அவள் வனப்பை இமையினுள் வைத்து விழிக்கு விழியாய் வாழ்ந்து வந்தேன்,
அவளது நினைவுகள் மழையாய் பொழிய அகம் குளிர திளைத்திருந்தேன்,
தனிமையில் நாட்கள் கடந்திட கடந்திட இனிமையாய் என் காதலை வளர்த்துவிட்டேன்,
பிரிவு என்னகம் சிதைக்க நினைத்த பொழுதும் தாழ் திறக்க மறுத்து விட்டேன்.....
காலம் அது கடந்திட கடந்திட அவளது காதல் மாய்ந்திட கண்டேன்,
துனிந்து எந்தன் காதல் சொன்னேன்,
அவளது காதல் முழுவதுமாய் மாய்ந்ததை உணர்ந்தேன்,
விதை விதையாய் விதைத்த காதல் மாய்ந்ததை எண்ணி விழி வழியாய் உதிரம் சிந்தினேன்,
கதிர் இல்லா பகலாய் ஆனேன்,
மதி இல்லா இரவாய் வருந்தினேன்,
எந்தன் விதியினை எண்ணி கலங்கினேன்,
கதறி கதறி கண்ணீர் தீர்த்தேன்,
என்னுள் புதைந்த அவளை வெறுத்தேன்,
சிந்தையில் நிறைந்த வனப்பை சிதைத்தேன்,
என்னுள் வாழ்ந்த காதலை மாய்தேன்,
எனினும் என்னுயிர் கொண்ட காதல் மரியவில்லை,
கண்ணீர் கொண்டு முடிந்ததால் என் காதலும் காவியமா?

எழுதியவர் : சுந்தரபாண்டியன் பாரிவள்ள (1-Mar-14, 12:57 pm)
பார்வை : 101

மேலே