தீண்டாமை
கல்லை தூக்கி நிமிர்த்த
எங்கள் தோள் வேண்டும்!
கோவில்கருவறைக்கு செல்ல
அனுமதிஇல்லை...!
குப்பை கழிவை அகற்ற
நாங்கள் வேண்டும்!
உண்டியலை தொடகூட
அனுமதிஇல்லை...!
விட்டுசெல்லும் பாதகைக்கு
துணையாய் நாங்கள்!
தொட்டு வணங்கிட
அனுமதி இல்லை...!
கழனியில் கட்டை
தூக்கி சுமக்க நாங்கள்!
கஞ்சுக்கு கூட
வழியே இல்லை...!
பட்டை போட்டு திரியும்
பட்டாடை உடையும்!
பக்திமானாய் வேசமிட்டு
பதராக்கினாய் எம் வாழ்வை...!
எல்லாம் இறைவன் செயல் என்றே
கொல்லாமல் கொல்கின்றாய்!
அன்னை மடியில் அவதரித்த
அனைவரும் மனிதன் தானே...!
வெள்ளை வேட்டி நீ உடுத்த
வெல்லாவியாய் நான் ஆனேன்!
உழைத்து உழைத்து நான் கருத்ததினால்
நெய்யும் சோறும் நீ உண்கின்றாய்...!
காக்கும் கடவுள் மாயவன்
என்குலத்தில் பிறந்தானடா !
நீ சொல்வது வேதமென்றால்
நான் சொல்வது கீதமட ...!