இறுதித்தேர்வு
கருவிழிகளை கனவுகள்
சூழ்ந்திருக்க
கண்ணிமைகள் கனவுகளை
மூடியிருக்க
அறிவுக்கதவு திறந்து
வை தோழமையே ......!
இரவெல்லாம் கண்விழித்து
துயில் தொலைத்த
நாளைய விடியலுக்கான
இன்றைய இரவுகள்........!
பள்ளி இறுதி நாட்களில்
நட்பின் பிரிவு..........
காற்று மண்டலம்
கூட கனமாக
காணப்படும் மாலை
வேலைகள்.............!
பலூன்களில் பறக்க
துடிக்கும் இளம்
இதயங்கள்......!
தான் தொலைந்த
இடத்தை
தானே தேடும்
நிலாக்காலத்தில்........
தன்னையே
தொலைத்து நிற்கும்
மீள முடியாத
தருணங்கள்........!
பள்ளி தோழியின்
காதல்............!
விலகி சென்ற
மேகங்கள்
வழிமாறிவிட்ட
கதைகள் இங்கு
ஏராளம்........ஏராளம்........!
கல்லூரிக்கனவு
விரும்பிய பணி
எல்லா இலட்சியங்களும்
இன்றைய விடியலில்
திருப்பு முனை தேடி
முக்கிய பங்காற்றுகின்றன......!
முன்னூற்று அறுபது
நாளின் உழைப்பு
மூன்று மணி
நேரத்தில்.............
தெளிந்த
மனதுடன்........
பேனா பற்றி
உனக்கு நீயே
எழுதிக்கொள்ளும்.............
எதிர்கால....
சுயசரிதை........!
வாழ்த்துக்களுடன்..............
வித்யா........!