பறவை கூடு

வானம் சிறகு
மேகம் குளிரு
காகம் புதிது
வெளிகள் உணர்வு
மௌனம் சிதறு
கணங்கள் புதிரு

சூரிய விரலில்
சுந்தர நகங்கள்
சந்திர இருளில்
மந்திர யுகங்கள்

காரிருள் கூந்தல்
காடெல்லாம் மலைகள்
ஏரிக்கரை பந்தல்
ஓடேல்லாம் துளிகள்

தாமரை உள்ளங்கை
தாகத்தின் உள்நாக்கு
தவம் செய்ய தொடங்கு
தத்தி நடக்கும் தனிமைகள்

ஊர் இழுத்தும் வரவில்லை
பெண் போல ஒரு தேர்
தேர்வடத்தில் தேகம் உருள
உன் ஓவியம் புது தேடல்

யார் கூறும் எதுவொன்றும்
சிறு துரும்பின் இயல்பாகும்
பொருளாகும் ஒவ்வொன்றும்
புதுப்பார்வை விரிவாக்கம்

உடைந்திட்ட மேகங்கள்
விடை தேடும் தாளங்கள்
விடையில்லா யூகங்கள்
விழி மூட காணுங்கள்

ஜன்னல் திற
விடுதலை நிலவுக்கு
பின்னல் துற
கடும் போட்டி இரவுக்கு

திறந்து விடு
பறவை கூடு
பறந்து விடு
பறவையோடு

மறந்து விடு
கவலைப் பாடு
மரணம் கூட
மற்றோடு கூடு...

எழுதியவர் : கவிஜி (4-Mar-14, 2:36 pm)
Tanglish : paravai koodu
பார்வை : 156

மேலே