இறைவன் இருக்கிறானா
இறைவன் இருக்கிறானா?
இருந்தால் வரச்சொல்லும்
கல்லிலே சிலைவத்தே
கல்லாக்கி விட்டோமோ?
அவனிடம் கேட்பதற்கு
எத்தனையோ கேள்வி உண்டு
இறைவன் உண்மை என்றால்
ஏற்றத்தாழ்வை ஏன் வைத்தான்
அனைத்தும் அவன் செயல் என்றால்
லஞ்ச ஊழல் ஏன் வைத்தான்
பாவம் என்று தெரிந்திருந்தும்
திருநங்கை ஏன் படைத்தான்
இரக்கம் உள்ளவன்
இறைவன் என்றால்
ஊனமுற்றோர் ஏன் படைத்தான்
அன்பின் வடிவானவன் எனில்
அனாதைகளை ஏன் படைத்தான்
புனிதமானவன் இறைவன் எனில்
போர்களை ஏன் பூமியில் விதைத்தான்
பெண் தெய்வம் உண்மையெனில்
பெண்ணிற்கு ஏன்
பாலியல் தொல்லை வைத்தாள்
ஆதிமூலம் இறைவன் எனில்
அரசியலை ஏன் படைத்தான்
கருணை உள்ளவன் கடவுள் எனில்
காசு பணம் ஏன் படைத்தாம்
முக்காலம் உணர்ந்தவன் எனில்
முதியோரில்லம் ஏன்ப டைத்தான
இயற்கை இறைவன் எனில்
இயற்கை சீற்றம் ஏன் கொடுத்தான்
கேட்க கேட்க கோடி கேள்வி
என்னுள்ளே எழுந்தாட
இறுதியாய் ஒரு கேள்வி...
அனைத்தும் நானா செய்தேன்
கேடு கெட்ட மனிதன் செய்தான்
என்று இறைவா நீ சொல்லிவிட்டால்
கேடு கெட்ட மனிதனுக்கு
கெடுமதியை ஏன் வைத்தாய்....
அழிவையே சிந்திக்கும்
ஆறறிவை ஏன் கொடுத்தாய்
மனித குலம் நீ படைத்து
பூமியை ஏன் கெடுத்தாய்...
கல்லென்றால் பதில் வேண்டாம்
கடவுள் என்றால் பதில் கூறு