இன்றைய காதல்
காதலுக்கு மடல்கள் எழுதும்
காலம் போச்சு
எசெம் எஸ் என்று
அது மாறி போச்சு
எழுத்தே கையெழுத்தே
மறைந்து போகும்
காலம் வந்தாச்சு
இனி காதலுக்கு ஏது
அழகும் சுவையும்
வேகமான வாழ்கை
எங்கும் வந்தாச்சு
இங்கே காதல்
வெறும் சலனமே
அதில் அழகு அன்பு
இவை இரண்டும்
இல்லை இல்லை