அன்பிருக்கும்வரை
தீபத்தின் சுடர்,
எரிந்திருக்கும்வரை...
அதனைச்சுற்றி வெளிச்சம் இருக்கும்!
மலரின் தேன்துளி,
சுரந்திருக்கும்வரை...
அதனைச்சுற்றி வண்டுகள் பறக்கும்!
வானத்தின் மேகம்,
கறுத்திருக்கும்வரை...
அதனைச்சுற்றி நட்சத்திரங்கள் மின்னும்!
கடலின் அலைகள்,
நீரை இறைத்திருக்கும்வரை...
அதனைச்சுற்றி கரைகள் நனையும்!
உன் இதயத்தில்,
அன்பிருக்கும்வரை...
உன்னை சுற்றி உறவுகள் உலவும்!
ரோஜா மீரான்.