அதிர்ச்சி
அமைதியாய் நுழைந்த உறவு !
ஆக்கிரமித்தது வானம் நெடுகிலும் !
நெஞ்சோடு கதைபேசி,
நேசம் வளர்த்து பாசம் படர்த்தியது !
சுவாசமெல்லாம் அதன் வாசம் வேசமில்லாமல் !
நனைந்தேன் நித்தமும் நாள் நெடுகிலும் !
படர்ந்த நிஜம் வரண்டுபோனது சட்டென்று !
விழியை தொட்டது விழியை உடைத்தது !
வழியைத்திருடிய மொழியாய் ஆனது !
ஏன் ஒரு அதிசய வாழ்க்கை நிகழ்ந்தேறியது,
நினைவுகளுக்கு அப்பால் ஒரு தேசத்தில் !
அங்கே செல்ல உறக்கமும் கனவும்,
நிச்சயத்தேவையாய் இருக்கிறதே !
கனவில் வந்து காணாமல்போகிற உன்னை,
கவிதைகள்மட்டும் கொண்டு எப்படி தேடுவேன் !!