காதல் ஆத்திசூடி
அறிமுகம் ஆவது கண்களின் சந்திப்பு
ஆரம்பம் ஆகுது அளவற்ற வர்ணிப்பு
இயல்இசை படைப்பதை ஊக்குவிக்கும்
ஈர்ப்பதில் காந்தசக்தியை தோற்கடிக்கும்
உயிர்மூச்சு உடல்பொருள் ஆவியாகும்
ஊர்முழுக்க எதிர்த்தாலும் சமாளிக்கும்
எட்டுத்திக்கும் ஓயாது எதிரொலிக்கும்
ஏடுகளில்லாமல் பரீட்சைக்கு தயாராகும்
ஒட்டிபழகி நுனிநாக்கில் தேன்தடவும்
ஓசைகளில்லாத மொழியில் பேசிக்கொள்ளும்
ஓளடதங்கள் தேவைபடாமல் உயிர்காக்கும்
அஃறிணை பொருட்களிலும் ஜீவன்சேர்க்கும்.