அடக் கடவுளே கடவுளே
கண்ணகிக்
காற்சிலம்பு விற்றவன் ....
சரித்திரத்தில் ....
கால் நடையில்
கொலுசு விற்பவன் .....
தரித்திரத்தில் ....
மிதிலையில்
வில் உடைத்தவன்
மணவறையில்
பிழைப்புக்கு
கல் உடைப்பவன்
தெரு முனையில் ......
வெண்ணைத்
திருடி உண்டவன் ...
வைகுண்டத்தில் ...
வறுமைக்குத்
திருடித் தின்றவன் ...
நீதி மன்றத்தில் ....
வீம்புக்கு
நஞ்சு உண்டவன் ....
கைலாசத்தில் ..
காதலுக்காக
நஞ்சு உண்டவன் ...
கல்லறையில்
மலர் கணை
எய்பவன் ...
அந்தப்புரத்தில்
அம்பை ..
நொந்தவன் ....
அந்தரத்தில் ....
இருவரை
மணந்தவன் ...
பழனி மலையில் ...
ஒருத்தியை
மணந்தவன் ...
இமய மலையில் ....
தொழுவத்தில்
பிறந்தவன் ..
வானத்தில் ....
ஆடு
மேய்ப்பவன்
துன்பத்தில் ....
முற்றும்
துறந்தவன்
பட்டாடையில் ...
இல்லறம்
நடத்துபவன்
நிர்வாணத்தில் ......
உயிர்களைப்
படைத்தவன்
தலை மறைவில் ..
உண்மையை
உரைத்த ....
நானோ ....
சிறை அறையில்.....