கரிசல் மண்ணில் ஒரு காவியம்16

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.16

அத்தியாயம் 16

ஆசிரியர் சமயோசிதமாக இடம் பார்த்து நச்சுன்னு ஒரு கேள்வியை நறுக்குன்னு வைத்தார்.இவர் போட்ட கிடுக்குப்பிடியில் மாட்டிக்கொண்டவர் தாயாரின் முகத்தைப்பார்த்து,”இதற்கு நான் என்னம்மா பதில் சொல்வது”என்பது போல் விழித்தார்.தன் தாயாரின் எதிர்வினை இதற்கு எப்படி இருக்குமோ எனும் அச்சமும் அவர் முகத்தில் இழையோடியது.தலைமை ஆசிரியர் கமலாவின் தந்தையார் என்ன சொல்லுவார் எனவும் ஆர்வத்தோடு அவர் கண்களின் பரிதவிப்பைக் கண்டு எதிர்கொண்டு காத்திருந்தார்..

உடனே கமலாவின் தந்தை சுதாரித்துக்கொண்டு ஆசிரியரின் கேள்வியைப் புரிந்து கொண்டவராய்க் காட்டிக்கொண்டு.நமட்டுச்சிரிப்பு ஒன்றை உதட்டிலேயே சிரித்து “அடடே இவரிடம் மாட்டிக்கொண்டு விட்டோமே.பாதகமான பதில் சொன்னால் நமது பகல் வேசம் பல்லிளித்துவிடுமே”என தன் மனதில் எண்ணிக்கொண்டு
“அய்யா நீங்க என்ன கேக்க வாரீங்கன்னு எனக்கு நல்லாவே புரியிது..கமலாவை ஏங் பள்ளிக்கு இன்னும் அனுப்பாம வச்சுரிக்கீகன்னுதான கேக்குறீக/.சமூக சித்தாந்தவாதிகளான பெரியார் பாரதியார் மற்றும் வள்ளலாரைப் பற்றி புரிந்துவைத்துள்ள இவர் ஏன் இப்படிப் பிற்போக்கு வாதியா இருக்குறாரேன்னு என்னுடைய கொள்கைய நீங்க சந்தேகப்பட்டுக் கேக்குறீகன்னு எனக்குப் புரிஞ்சிருச்சு.”எனும் அப்பெரியவரின் மறுமொழி கேட்ட தலைமை ஆசிரியர் ,”ஆமா அப்படித்தான் வைத்துக்கொள்ளுங்களேன்”எனத்”தனது தெளிவான கண்ணொளியில் மௌனமான சிரிப்போடு ஆமோதித்தார்.

‘”பள்ளிக்கு அனுப்பத்தான் இருக்கிறோம் அய்யா அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு”என அமைதியாகக் கூறி ஆசிரியரின் வெற்றி முத்தைப்பார்த்துப் புன்னகைக்கிறார் கமலாவின் அப்பா.இந்த சொற்கள் ஆசிரியரின் செவிகளில் ஆயிரம் குடங்கள் தேன்நிரப்பிக் கொட்டியதுபோல் இனித்தது.அவர்கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.கலிங்கப்போரில் வென்ற அசோகரைப்போல் ஆனந்தம் கொண்ட அதே வேளையில் தோற்றுத் தலை தாழ்ந்த கமலாவின் முகம் கண்டும் தன் வெற்றியை அமைதியாக சுவைத்துக்கொண்டு அப்பெரியவரின் கைகளைப் பற்றி ,”மிக்க நன்றி அய்யா”எனக்கூறி தன் கண்களில் ஆனந்தக்கண்ணீரை உதிர்க்கும் முன் தன் கைத்துணியால் அவசரமாகத் துடைத்துக்கொண்டார்..ஆனால் அப்போது ஆச்சியின் முகத்தில் கடுகு வெடிக்கும் எரிச்சல்கொடூரமாக இருந்தது.அதையும் ஆசிரியர் கவனிக்கிறார்.ஆனால் ஆச்சியின் முயற்சிகள் இனி பலிக்காது எனத தெளிவடைந்தார்.இருந்தாலும் உறுதி செய்துகொள்ளும் விதத்தில்.எப்போது அனுப்பலாம் என்று எண்ணுகிறீர்கள்.எனக்கேட்டார்.

“வரும் திங்கள் கிழமை அனுப்பி வைக்கிறேன்.இப்போ உங்களுக்கு திருப்தியா:என மீண்டும் இனிப்பைத் தந்தார் “மிக்க மகிழ்ச்சி அய்யா.அப்போ நான் வரட்டுங்களா?......சரி.கமலாவிடம் கூற வேண்டுமே!....கமலா”!என வெற்றிசங்கம் முழங்குவதுபோல் ஆனந்த் தொணியில் அழைத்தார்.
கமலா மகிழ்ச்சி வெள்ளப்பெருக்கு மடை உடைத்துத் துள்ளி வருவதுபோல் குடுகுடுவென ஓடோடி வந்து தன் தலைமை ஆசிரியரின் கால்களில் விழுந்து நன்றிக்காணிக்கையாய் கண்ணீர் முத்துக்களைக் கொட்டி அர்ச்சிக்கிறாள்..உடனே ஆசிரியர் தன் இருகரங்களாலும் அவளை அரவணைத்துத் தூக்கி அவள் கண்களை தன் விரல்களால் தட்டிவிடுகிறார்

“இப்போ உனக்கு சந்தோசம்தானே.இன்னும் இரண்டே இரண்டு தினங்கள்தான்.திங்கள் கிழமை முதல் மீண்டு என் வகுப்பறையில் .கலகலக்ச்செய்யப் போகிறாய்..சரி நான் வரட்டுமா?’என கங்கை கொண்ட சோழனாய் பெருமிதத்தோடு வந்த வினை முடித்து நகர்ந்தார்.அப்போது தன் இரு கைகளை கூப்பி வணங்கி வாழ வைத்த வள்ளலை வாழ்த்தி நின்றாள்.

ஆசிரியர் எப்போது வெளியே செல்வார் எனக் காத்துக் கொண்டிருந்த ஆச்சி தன் ஆட்டத்தைத் துவங்கினாள்.“பொட்டப்புள்ளைக்கு எதுக்குப் படிப்பு மண்ணாங்கட்டி.இவ என்ன படிச்சுக் கலக்டர் வேலைக்கா போகபோறா?.
அடுப்பு ஊதப்போற கழுதைக்கு இம்புட்டுப்படிச்சது போதாதாக்கும்.அதெல்லாம் பள்ளிக்கூடமெல்லாம் போனதும் போதும்”என தன் வசனத்தைப் பேசித் தீர்த்தாள்.

இதுவரை அமைதியாக பொறுமையோடு பொறுத்திருந்த கமலா இப்போது பொங்கி எழுந்தாள்.ஏய் கெழவி என்ன ஓவராப் பேசுற படிப்புங்குறது என்னோட சொந்த வாழ்க்கைப் பிரச்சன.அது வேணுமா வேண்டாமான்னு நான்தான் முடிவு எடுக்கணும்.உன்னோட முடிவு எனக்குத் தேவ இல்ல புரிஞ்சுதா?இன்னுமே என்னோட வாழ்க்கையில வெளயாண்ட அப்புறம் நாங் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.ஜாக்கிரத.”எனத் தன் உணர்வுகளைக் கொட்டினாள் கமலா.

“என்னடி பெரியவங்கள மரியாத இல்லாமப் பேசுற. இந்த வீட்ல நாந்தாங் பெரிய மனுசி.அதனால நாங் என்ன நெனக்கிரேனோ அதாங் நடக்கும்.”என தன் வழக்கமான பழைய மடமையில் பேசினாள் ஆச்சி.
“என்னது பெரிய மனுசியா?யாரு நீ பெரிய மன்சியா?நல்லது செஞ்சா நீ பெரிய மனுசி.ஆனா நீ நயவஞ்சகி.என்னோட எதிகாலத்தக் கெடுக்க நெனக்கிற நீ பெரிய மனுசியா?பெரிய் மனுசின்னா புள்ளங்கள படிக்க வச்சு அழகு பாக்கணும்.ஆனா நீ என்னப் படிக்கவிடாமக் கெடுத்துக் குட்டிச்சுவரா ஆக்கப் பாக்குறயே !நீயெல்லாம் நல்ல சாவே சாக மாட்ட. புழுத்துப் புண்ணாகி நாறி நாத்தமெடுத்துச் செத்து நரகத்துக்குத்தான் போவ சண்டாளி..இது பழைய பைத்தியக்காரக் காலமுன்னு எண்ணாத!இது பாரதி பெரியார் கண்ட புதுஉலகம்.
எங்களுக்கும் அவங்க எப்படிப் பேசனுமுன்னு சொல்லிக் குடுத்துருக்காங்க.இன்னுமே எல்லாம் பொண்ணுங்களப் பூட்டி வச்சி அடிமையாக்கனுமுன்னு நெனச்சா அது நடக்காது..
பொம்பளைங்களும் உசுருள்ள ஜீவன்கள்தான்.அவங்களுக்கும்.உசுரு இருக்கு உணர்வு இருக்கு.அவங்களுக்கும் சுயமா சிந்திக்குற அறிவு இருக்கு.பொம்பளைங்கன்னா அடுப்புலகிடந்து சாவுரதுக்கும்.கோலம் போடுறதுக்கும்,புள்ளயப்பெத்துக்குடுக்குரதுக்கு மாத்திரமுன்னு நெனைக்காத.அது உன்னோட அந்தக் காலம்.இந்தக்காலம் பொம்பளைங்க ராக்கெட்டுல பறக்குற காலம்..துப்பாக்கி எடுத்து எல்லையில நின்னு சண்ட செய்யிற காலம்.ஆம்பளைங்க செய்யிற எல்லா வேலையும் பொம்பளைங்களும் செய்வாங்க.புரிஞ்சதா?இன்னுமே ஏதாவது இப்படி முட்டாத்தனமா பேசுனே நானே கல்லத் தூக்கிப்போட்டுக். கொன்னுருவேங் ஜாக்கிரத.”என ஆவேசமாகக் கொந்தளித்தாள் கமலா.

“ஓகோ அப்படின்னா அந்தப் பயலுக்குக் கல்லத்தூக்கிப் போடச்சொல்லி நீதாங் சொல்லிக்குடுதையா?”என பேச்சை திசை மாற்றினாள் ஆச்சி.
அதுவரை தன் மகளின் அறிவார்த்தமான பெண்ணுணர்வின் எழுச்சி முழக்கங்களை வியப்போடு ஆர்வமாகக் கவனித்துக்கொண்டிருந்த தந்தை தன் மக்களைப்பற்றி தாயே ஆனாலும் பொறுத்துக்கொள்ளமுடியாதவராய் திடீரென் குறுக்கிட்டு “அம்மா என்ன நீ பேசுற.!பொம்பளப் புள்ளைகிட்ட என்ன பேசுறேங்கிறதன்னு தெரிஞ்ச்தாங் பேசுறையா”எனத்தன் தாய்க்கு எதிராக நியாயமான திசையில் பேசத் துவங்கினார்.
“ஏண்டா அவ இவ்வளவு நேரமும் என்ன பேச்சுப் பேசுனா.அப்பெல்லாம் வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்துட்டு. இப்பக் கொந்தளிக்கிற.அவள நீ ஒரு வார்த்தையாவது கண்டிச்சியா?”எனத் தன் மகனைத் துணைக்கிழுக்கும் முயற்சியில் இறங்கினாள் கெழவி.அவ தப்பா எதுவும் பேசலயே.அவ பாதிக்கபட்டவா அவளுக்கு வேகம் இருக்கத்தாங் செய்யும்.நீ இன்னும் பழைய காலத்தயே இன்னும் புடிச்சித் தொங்கிக்கிட்டு இருந்தையின்னா அதெல்லாம் இப்போ எடு படுமா..அவ படிக்கணுமுன்னு நெனக்கிறா.அத நெனச்சி நாம பெருமைப்படணும். இப்போ காலம் ரொம்ப மாறிப்போச்சும்மா.அதனால ஓங்க்காலத்த இன்னும் நினைக்கக்கூடாதும்மா.புள்ளைங்க என்ன ஆசப்படுதோ அத நிறவேத்தி வைக்கிறதுதாங் பெரியவங்க கடமை.அத ஏங் நீ புரிஞ்சிக்காம அடம் புடிக்கிற..உனக்கு வயசு ஆயிப்போச்சு.ஓங் காலமும் முடிஞ்சி போச்சு..அவங்க வாழ வேண்டிய வயசு.அதனால அவங்க வாழ்க்கையைப்பத்தி அவங்க கவலைப்ப்டுறதுக்கு அவங்களுக்கும் பொறுப்பு இருக்கும்மா.அவ படிக்கணுமுன்னு சொல்றவட்ட நாம வேண்டாமுன்னு எப்படி சொல்லமுடியும்.இது அவங்க வாழ்க்கைப் பிரச்சன அதுல நாம ஒரு குறிப்பிட்ட எல்லைவரைக்கும்தான் தலையிட முடியும்.நாம அதையும் தாண்டி தலையிட்டா அப்புறம் நமக்குத்தான் மரியாத இருக்காது.ஏன்னா இப்போல்லாம் அவங்களுக்கு நால்லாவே அறிவுபூர்வமா யோசிக்கதெரியுது.அத நாமதான் புரிஞ்சிக்கணும். அவங்க அவங்க எதிர் காலத்தப்பத்தி அவங்க அவங்களுக்கு அக்கறை இருக்குது நாயம்தானம்மா..அவ படிக்க போகட்டும்.வீணாத் தடுத்துக் கடைசிக் காலத்துல பாவப்பழியச்சுமக்காத.உனக்கு ஆசையா என்ன வேணுமோ அத மாத்திரம் என்கிட்டக்கேளு.அதுல ஏதாவது குறை இருந்தாமட்டும் எங்கிட்ட சொல்லு. காலம் போற போக்க புரிஞ்சு நடந்துக்கோ”எனத் தாயை சமாதானப்படுத்திவிட்டு. மகளை தன் நெஞ்சோடு அணைத்து முத்தமிட்டு,”.இனி நீதானம்மா எங்களுக்கு எல்லாம். ஆச்சி சொன்னதைய்ல்லாம் மனசுல வச்சுக்காத..போ....ஆமா சாப்புட்டயா நீ ........ஏம்மா சுப்பு கமலா சாபட்டாளா?எனக் கேட்கிறார் சாமிநாதன்.

இதுவரை மௌனமாக கவனித்துக் கொண்டிருந்த கமலாவின் தாயார் சுப்பு இப்போதுதான்.நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறாள்..கமலாவின் கல்விப்பயணம் தொடர்வதில் அவளுக்கும் மகிழ்ச்சிதான்..அவள் மகிழ்ச்சி பொங்கிய உற்சாகமான குரலில் “கமலா!வாம்மா!வா!சாப்புடு.வா வா.சாப்பிட்டுட்டு ஓங் யூனிபாம் ட்ரெஸ் எல்லாம் துவைக்கன்னுமுல்ல`வா..வா.!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா (8-Mar-14, 4:12 pm)
பார்வை : 235

மேலே