துளி - துளிப்பா - பூவிதழ்

==மருத்துவ புரட்சி
நித்திரையும் யாத்திரையும் இல்லை
நித்தம் மாத்திரை மட்டும் !
---------------------------------------------------------------------------
==அறிவியல் புரட்சி
குறைந்துள்ளது எயிட்ஸ்
நிறைந்துள்ளது ஏமாற்றம்!
---------------------------------------------------------------------------
==தொழில்நுட்ப புரட்சி
எல்லோர்கையிலும் செல்பேசி
ஏனோ வாயெல்லாம் பொய்பேசி !

--------------------------------------------------------------------------
== விளம்பர புரட்சி
யாரோ சொல்லும் உப்பைத்தான்
யானும் வாங்குகிறேன் ரோசனையுடன் !
--------------------------------------------------------------------------
==மக்கள் புரட்சி
நோட்டுக்கு ஓட்டு
நோட்டா ஓட்டு
நெட்டிலும் ஓட்டு !
-------------------------------------------------------------------------

எழுதியவர் : பூவிதழ் (10-Mar-14, 1:38 pm)
பார்வை : 142

மேலே