ஏக்கம்

சுருண்டு படுத்து இருந்தவன்
சட்டென எழுந்து ஓட்டமும்
நடையுமாக ஓடினான்....

இரண்டு நாட்கள்
இடைவெளியில் ரொம்பவே தவித்து
இருந்தான்..
இன்றாவது அவளை பார்த்து
விட வேண்டும்.....

வறண்ட கேசத்தினை பின்
தள்ளிவிட்டு வேகமாய் நடந்தான்...
தவிப்புகள் ஆயிரம் நெஞ்சினில்
அலையடிக்க ....

அவள் போயிருக்க கூடுமோ..?
ஒற்றை கேள்வியே
ஓராயிரம் முறை செவிப்பறைய...
ஒடினான்.. நடந்தான்.. ஒடினான்...

குறிப்பிட்ட இடம் வந்ததும்
கண்கள் மட்டும் துலாவித் திரிந்தன...
கண்களில் வெள்ளம் பெருக..

"அவள் போயிருப்பாளோ"...?
அவளுக்காக கொண்டுவந்த பொன்வண்டு
தீப்பெட்டியில் சலனமின்றி, அவன்
தவிப்புகள் புரியாமல் இருந்தது..

தவறாமல் கடந்துப் போகும்
சில பேரிடம்
சினேக புன்னைகையும்...
"சரியா மணி 8.30 " என
நமுட்டு சிரிப்புடன் கேலிப்பேச்சும்..
பரிசாக.....

இதோ அவள் வந்துவிட்டாள்...
இதழ்கள் குவித்து முத்தங்களை
இறைத்துக் கொண்டு....

நானும் அவளைப்போலவே மாறினேன்
குழந்தையாய்....

மதியம் வரேன்... சாப்பாடு இருக்கு
போயிடாதீங்க என்றாள் ..

ஒரு தாயைப் போல.....

மீண்டும் முத்தங்களை இறைத்தாள்..
அழகான செல்லக்குட்டி.....

முத்தங்களை பொறுக்கிக்கொண்டே
மனம் வெதும்புகிறான்....

குழந்தைப் பேறு வரம் தான்...

எழுதியவர் : கவிதை தாகம் (10-Mar-14, 3:18 pm)
Tanglish : aekkam
பார்வை : 111

மேலே