மலர் மங்கை -போலியாய் மகளிர் தினம்

மலர் மங்கை

மலரினும் மெல்லிய அகமுடையவள்
ஏனோ பல அவலங்களுக்கு ஆளாக்கப்படுகிறாள்

அடிமையாக்கும் ஆண்ஆதிக்கம் கைப்பிடியாய்
கசங்குகிறாள் காலந்தோறும்

அன்றாட வாழ்க்கையை அவள் வாழ்வதே
இவ்வுலகில் பெரிய சாதனையாய்

வாங்கி வந்த வரங்களில்
சாபமாகப் பெற்றது தான் வரதட்சணை

வளர்ந்து படும் கொடுமைகளைக் காண
தயங்குவதால் ,தயக்கமின்றி ஏற்றது
தானோ பெண்சிசுக்கொலை

உணரவேண்டும் அவளும் ஒரு உயிரென்று ,
இரத்தமும் சதையும் கலந்த ஜடமன்று என்பதையும்

புன்னகைப் பூக்களை உதிர்க்கும் அவளின்
உள்ளத்தில் அகழ்ந்தால் வெறும் நீர்குளங்கள்
ஊற்றெடுக்கும் கண்ணீராய்
உதிரம் உருக்கிப் பாலூட்டிய அன்னையை
உதாசினம் செய்யாமலும்

உனக்கொன்று என்றால் துடித்துப் போகும்
மனைவிக்கு மதிப்பளி மனதிலென்றும்

வேறு கூட்டிற்க்கு செல்லும் சகோதரிகளிடம்
வீட்டிலிருக்கும்போது கடனுக்காவது அன்பைக் காட்டு

நாள் தோறும் நமக்காய் வீட்டில் உழைத்து
ஓடாய் தேய்ந்துபோனவளுக்குப் பெயர்தான்
“மலர் மங்கை”

அனுதினமும் அன்பு காட்டுவதை விடுத்துவிட்டு
அமாவாசைக்கு காத்திருக்கும் ஐயர் போல இருக்கிறது

“நாம் போலியாய் மகளிர் தினம் கொண்டாடுவது“...

எழுதியவர் : செல்வக்குமார் சங்கரநாராய (11-Mar-14, 12:05 pm)
பார்வை : 136

மேலே