கண்ணே, கற்கண்டே
கொஞ்சும் விழித்திரை பார்த்தேன்.
நெஞ்சம் மகிழ்ந்திருந்தேன்.
மஞ்சம் நிறைந்திருந்தேன்.
தஞ்சம் என்றே கண்டேன் .
விஞ்சும் தமிழ் கேட்டேன்.
கெஞ்சும் மொழி தந்தேன் .
வஞ்சம் இல்லா முகம் தந்தாள் .
அஞ்சும் நடை பயின்றாள் .
அள்ளி அணைத்தேன் ,
எனதருமை,
இரண்டு வயது மகளை !
(மகள் இல்லாத குறையை
மனத்தால் நிவர்திக்கின்றேன் )