ஓட்டு வேணுமா வேட்டு வேணுமா - மணியன்

நண்பர் சந்தோசுடன் ஏற்பட்ட கூட்டணி காரணமாக அவர் கூறியது போல தேர்தல் வரை எங்களது இந்த படைப்புகள் தொடரும்.. கூட்டணியில் சேர விரும்மபுவோர். . வந்து தோள் கொடுக்லாம். . அல்லது எமது தோள்களைத் தட்டியாவது கொடுக்கலாம் -- மணியன்
========================================
வேட்டி சேலை வாங்க எம்மை
கோட்டி போல அலைய வைத்து
கெட்டிக் காரன் போல வந்து
நடிச்சு எமது காலில் விழுந்தூ. . . .

கிடைச்ச கூலி போத வில்ல
வடிச்ச கஞ்சி குடிக்க இல்ல
துடிச்சு நாங்க போனத மறந்து
அடிச்சதில் பிச்சை இடவா பார்த்தீர். . . .

மழித்த மீசை வளர வில்ல
கிழியாத துணி வேற இல்ல
மடிக் கணிணி திரையைப் பார்த்தும்
முடிச்சு வைக்க கவலையா இல்ல. . . .

ஓட்டுப் போட உமக்கு மீண்டும்
பிச்சை போட எமக்கு மனமுமில்ல
நாட்டுக் குள்ள உம்ம விரட்டி
வேட்டு வைப்பான் எங்க புள்ள. . . . .

எங்கப்பன் சுப்பன் உம்மோடு தான்
எங்கும் திரிஞ்சு அலைந் தானாமே
உங்கப்பன் அன்று சேர்த்த காசு
கோவனத் திலும் நிற்க வில்ல. . . .

மஞ்சள் பையுடன் மதராஸ் வந்தாய்
விஞ்சும் செல்வந்தர் பட்டியல் நின்றாய்
கெஞ்சிய எமது மொழிகள் அறுத்து
நெஞ்சம் கிழித்து உயிரைக் குடித்தாய். . . .

தின்று உண்ட சுவையால் திளைத்தாய்
இன்று எங்கே மீண்டும் வந்தாய். .
கன்று நாங்கள் கரடி அல்ல
வென்று உங்கள் கதையை முடிப்போம். . .


நன்றி. . சந்தோஷ்.. . அடுத்து உங்கள் மேடை. .
மறுபடி அடுத்த கூட்டத்தில் சந்திப்போம். . .
தொடர்க.. . - மணியன். .


*-*-*-* *-*-*-*-* *-*-*-*-*-* *-*-*-*-*

எழுதியவர் : ஊக்கம் - சந்தோஷ் (12-Mar-14, 12:36 am)
பார்வை : 190

மேலே