நட்பதுவின் இலக்கணமே

இங்கும்அங்குமாய் நெடில்குறிலாய்
இடம் மாறி குழப்பத்திலே
பட்டமரமாய் சுட்டபழமாய்
வெட்டவெளியில் வெய்யிலிலே

தன்னந்தனியாய் தாகத்தோடு நான்
எழுகடலின் நடுவினிலே
விட்டுவிடவா விலகிவிடவா
தட்டுத்தடுமாறி தவிக்கையிலே

ஆளில்லாப் பேரில்லா
ஆழிஎனும் அட்டை வந்து
முத்தமிடுகிறேன் என்று சொல்லி
மொத்தமாக என் இரத்தமெல்லாம்
குடித்திடத்தான் நினைக்கையிலே

சங்கு முழங்கி சத்தமிட்டுத்தான்
தங்குத் தடைகள் யுத்தம் விடத்தான்
வந்து நின்றதே தோழர்படை - எனக்கு
தந்து நின்றதே உயிரின்எடை

முற்றுப்பெறவோ முடித்திடவோ
முடியாத வண்ணமாய்
சுற்றுச்சுவராய் பக்கத்துணையாய்
முழுநிலவாய் தோழர்படை!

கவலைநீங்கி களைப்புநீங்கி
களத்திலேதான் இறங்கிடவே
காரணமாய் தளநட்பே
வாரணமாய் எழுத்துதளம்
தோரணமாய் நட்புக்களம்!

நட்பதுவும் நட்பதுவே
நட்பதனின் இலக்கணமே!

எழுதியவர் : உமர் ஷெரிப் (11-Mar-14, 10:10 am)
பார்வை : 352

மேலே