என் இனிய காதலியே
(காதல் அரும்பிவிட்டால் கவிதை வரிகளுக்கா பஞ்சம். புத்தி கெட்ட மனசு இதோ கவிதை சொல்லுகிறது)
நிலவு எடுத்து
தேய்த்துக் குளித்தவளோ!
தாமரை பூவுக்குள்
கருவாகி வளர்ந்தவளோ!
அந்தி வானத்தை
அரைத்து பூசிய நிறமோ!
சுடும் விழியோ
கொட்டும் தேனீயோ!
மெழுகு தீபத்தின்
கன்னமோ!
அலையின் பாதம்
அவளுடயதோ!
கண்ணாலே ஒரு
கவிதை சொன்னாளே!
அதனாலே நெஞ்சில்
ஆயிரம் மின்னலே!
பால்த்துளி பற்களால்
என்பெயரை கொஞ்சம்
மெல்லடியே!
வெற்றிலை எச்சிலால்
எனக்கு இரத்ததானம்
செய்யடி!
உன்னில் விழிகள்
விழுந்து கிடந்தால்
எரிமலை நெருப்பை
கண்ணில் தாங்குவேன்!
தூரம் போனால்
இமைகளின் முடிகளும்
முள்ளாய் உணர்வேன்!
நெத்தி மேல
வாயவச்சி போட்டு ஒன்னு
வச்சிவிட்டு!
நெஞ்சுமேல காத
வச்சு உன் பெயரை
கேட்டு விடு!
பார்வை பட்ட
காயத்துக்கு மருந்து
பாதம் பட்ட
மண்ணடி!
இனி உன்பாதம்
பதிவதற்கு என்
உள்ளங்கை போதுமடி!
சேலை துவைத்த
அழுக்கு தண்ணி
ஆத்துக்கு அதிஷ்டமடி!
அழுக்கு தண்ணியில்
நான் குளிச்சா
நெஞ்செல்ல இனிக்குமடி!
நீ வச்ச பூக்களெல்லாம்
உன் கூந்தலை
சூடியதடி!
பூவே பூவைச் சுமப்பது
அதிசயமடி !
விழிகளின் மோதலால்
இதயம் ஆட்டங்கண்டது
அனிச்சை செயலாச்சு!
தூக்கம் எனக்கு
தூரமச்சு!
உன்னை காண
விழிகளும் சில சென்டி மீட்டர்
குதிச்சாச்சு!
உன்னை முழுங்கி
செரித்து
இரத்தத்தோடு கலந்து விட்டேன்
பிறகு எப்படி
உன்னை வாந்தி எடுக்க முடியும்!
@@@ @@@ @@@