பூ பார்த்ததில்லை

விழி திறவாய் பெண்ணே
இவன் காதல் மலர்வதை பார்த்ததே இல்லை..!!

மொழிந்திடுவாய் பெண்ணே
அந்த காதல் மொழியினை கேட்டதே இல்லை..!!

பொழிந்திடுவாய் பெண்ணே
இவன் காதல் மழையினில் நனைந்தே இல்லை..!!

புன்னகைப்பாய் பெண்ணே
என் காதல் தேசத்தில் பூ பார்த்ததில்லை..!!

நாணம்
எனக்கு சிலிர்ப்பூட்டியதில்லை
கொஞ்சம் நளினம் கொண்ட நடை தருவாய்..!!

நாசிக்காற்று
உயிர் நனைத்ததில்லை
நறுமலரே என் அருகினில் வா..!!

உன்னத
நிலைகள் சென்றதே இல்லை
உலகினை மறந்து நடைபோட வா..!!

உலகியல்
வாழ்க்கை சுகப்படவில்லை
உறவாகி இம்மைக்குப் பொருள் தருவாய்..!!

பெண்ணே...

என் உயிர் தொட்டு எழுப்பி வாழவைப்பாய்..!!

எழுதியவர் : வெ கண்ணன் (12-Mar-14, 9:43 pm)
Tanglish : poo paarthathillai
பார்வை : 90

மேலே