நட்பின் நன்மை தீமை

நட்பென்பது வெறும் நட்பன்று
அதுவும் ஒரு பந்தம்
வரமாகவோ...சாபமாகவோ
பால்ய காலத்தில்...
முதல் பொய் சொல்ல பழக்கியது
உண்டியல் காசை உடைக்க சொன்னது
அப்பா சட்டையில் திருட சொன்னது
பரீட்சையில் காப்பி அடிக்க தூண்டியது
திருட்டு மாங்காய்
பறிக்கச் சொன்னது
அனைத்தும் நட்பே....
இது சாபம் என்றால்
****்
விழுந்து எழுந்து
சைக்கிள் பழக்கியது
மொட்டை கிணற்றில்
நீச்சல் பழக்கியது
கிளையில்லா மரத்திலும்
வாணரமாய் தாவிடும்
வித்தை கற்று கொடுத்தது
சிறு கொய்யா கிடைத்தாலும்
காக்கா கடி கடித்து
பகிர்ந்து கொண்டது
இதுவனைத்தும் வரம்
****

எழுதியவர் : சித்ரா ராஜ் (14-Mar-14, 8:42 pm)
சேர்த்தது : சித்ராதேவி
பார்வை : 567

மேலே