காதலுக்கு பிறந்த நாள்

டிசம்பர் 07,

எனக்கு பிறந்தநாளாம்..
1000 முறையேனும் சொல்லியிருப்பாள்..
எனக்கான வாழ்த்துக்களை..

நாங்கள் எடுத்த போட்டோக்களை
பிரேம் செய்து, கண்ணாடி பேழைக்குள் அடைத்து
அழகு பார்த்தாள் அவள்....

டைரி முழுவதும் எழுதி குவித்து விட்டாள்
என் வாழ்நாள் முழுவதுக்குமான
பிறந்தநாள் வாழ்த்துக்களை..

ஆறு பக்க வாழ்த்து அட்டையை
அவளாகவே செய்து பரிசாய் அளித்து
புன்னகையாய் பூத்தாள்..

கோவிலுக்கு இழுத்து சென்று
விபூதி வைத்துவிட்டு, அவளுக்கும் வைக்க சொல்லி உச்சத்திற்கே சென்று விட்டாள்..

ஸ்டிக்கர் பொட்டிலும் ஜிக்கினாவிலும்
எங்களின் பெயர்களை எழுதி
மழலையென மகிழ்ந்தாள்..

தோழிகளுக்கும் எனக்கும் இனிப்பு ஊட்டி
என் பிறந்தநாளை அவளே கொண்டாடி
என்னை திக்குமுக்காட செய்துவிட்டாள்...

பிறந்த நாள் உனக்கா...? எனக்கா....?
என்று கேட்டதற்கு ' நறுக்கென " தலையில்
கொட்டி 19B பஸ்ஸில் ஏறி சென்றுவிட்டாள்...

மார்ச் 15: ( இன்று )

என் இரண்டாம் அன்னைக்கு பிறந்தநாள்..
என் முதல் குழந்தைக்கு பிறந்தநாள்..
என் காதலுக்கு பிறந்தநாள்...
என் காதலிக்கு பிறந்தநாள்...


உங்களின் கேள்வி எனக்கு கேட்கிறது....

அட போங்கப்பா...!!

நான் எதுவுமே பன்னல..

--- ராஜு


குறிப்பு : இது என் முதல் படைப்பு...

எழுதியவர் : ஆறுமுகராஜ்.... (15-Mar-14, 6:56 am)
பார்வை : 516

மேலே