விதி விலக்கு
குளிரோடு எது சேர்ந்தாலும்
குளிர்ந்து போகும் - ஆனால்
உன் இதழோடு சேரும் என் இதழ் மட்டும்
பற்றிக்கொள்கிறதே..
காரிருளில் எது ஒன்றும் தெரிவதில்லை -ஆனால்
உன் காந்த கண்ணில் - என்
பிம்பம் தெளிவாக தெரிகிறதே..
எல்லா விதிகளுக்கும் விலக்குண்டு - படித்தபோது புரியவில்லை இப்போது புரிகிறது....