இன்று பூத்த என் கவியே-வித்யா

இன்று பூத்த என் கவியே............!

அடர்பனியின்
மெல்லிதழ் கடித்து
பசி தீர்த்து கொண்டாள்-என் கவி
கடிகாரத்தனிமையில் நுழைந்த
ஓர் இரவில்.......!

என் கைவிரல் பற்றிக்கொண்டு
உண்மையிடம் கொஞ்சம்
கற்பனையிடம் கொஞ்சம்
கடன் வாங்கிய கால்களில்
தளிர் நடையிட்டு.......
தலைசாய்த்து..
கண் இமைத்து...
இதழ் விரித்து.....
இன்னும் ஏதேதோ செய்கிறாள்.......!

வெற்று காகிதத்தில்
எழுத்துக்கள் கோர்த்து
வார்த்தையாக உருவெடுத்து......
அணிவகுத்து நிற்க
உன் அங்கம் வடிக்க
நிகழ் தகவென
எதை நான் தேர்ந்தெடுக்க.........!

அன்ன பறவைக்கு
குறிவைத்து வேடன்
தொடுத்த அம்பு போல்......
துளித்துளியாய்
மை தெளித்து.......
இன்றெந்த கவிப்பெண்ணுக்கு
குறி வைக்கிறானோ
என் கூர் மூக்கு வேடன்.......!

வானவில் கனவுகளில் எல்லாம்
வந்து போனவள்........
காதலாம் காதலென
கல்லாதவனைஎல்லாம்
கவிஞனாக்கியவள்.............!

அவள் ஒற்றை
புத்தகத்தின் அட்டைகளுக்கிடையே
சிக்கிக்கொண்ட உலகம்..........!

குரி சொல்லும் காதல்
ஜன்னல் வெளி நட்சத்திரம்
ஊமையான இடி
பார்வையிழந்த மின்னல்
துக்கம் தொலைத்த புன்னகை
நிர்வாணம் துறந்த மனிதம்
என.......

பக்கத்திற்கு பக்கம்
சிந்தி சிதறி.....
கொஞ்சி உலாவி.....
அலாதியின்பமாய்
வார்த்தைகளெல்லாம் எனை
சில்மிஷம் செய்ய.......

மூன்றாம் ஜாமத்தில்
நான் மூர்ச்சையாகிட
தானாக மூடிக்கொள்கிறது
என் பேனா
மூடி...................!



**************கவி ராட்சசி...........!

எழுதியவர் : வித்யா (16-Mar-14, 11:47 am)
பார்வை : 160

மேலே