நீ நிறைத்த நினைவுகளை என்ன செய்ய
பெயர் சொல்லி அழைத்தாய்
என் உயிரின் கதவுகள்
திறந்து கொண்டன !
இதயத்தின் இசை சிதறி
ஊநெங்கும் பரவியது !
எடையற்று மிதந்தலைந்தேன்
எண்ணமெல்லாம் நீயாக !
நீ அளித்த ரோஜா
உலர்ந்தும் இருக்கிறது
என்னுடன் பத்திரமாய் !
என் வசந்தத்தின் வானவில்லில்
நீ இறைத்த வர்ணங்கள்
உன் விழி பேசிய மொழிகள்
அவசரமாய் உன் இதழ்
பதித்த முத்தம் கூட
ஈரம் காயாமல் இருக்கிறது
என் நினைவெனும்
பசுமை பெட்டகத்தில் !
என்ன வார்த்தை சொல்கிறாய் நீ !
பிரிவோம் என்கிறாயே !
என் மூளையின் மடிப்புகளில்
நீ நிறைத்த இந்த
இனிய நினைவுகளை
நான் என்ன செய்ய !