சமாளிப்புபுதுக் கவிதை

சமாளிப்பு{புதுக் கவிதை}
*
தாமதமாகப் போகக் கூடாதென்று
சீக்கிரமாய் வந்துக் காத்திருந்தேன்.
பஸ் போய் வி்ட்டாத வென
அருகிலிருந்தவரிடம் கேட்டேன்
பஸ் போய்விட்டது என்றார்கள்.
வேறொன்றில் போகலாமென
விசாரித்தால்
ரோடு வேலை நடக்கிறது
அந்தப் பக்கம் போகாது என்றார்கள்.
வேறு பஸ் எப்பொழுது வரும் என்று
சொல்வதற்கில்லை.காத்திருப்பதும்
காலவிரயமென சேர் ஆட்டோவில்
ஏறப் போனால் உள்ளே கூட்ட நெரிசல்
உட்கார இடமில்லை.
அடுதது, என்ன செய்வ தென்று
முடிவெடுப்பதற்குள் போக வேண்டிய
பஸ் வந்து நின்றது. ஏறினேன்.
எப்படியோ,
தாமதத்திற்குக் காரணம்
கேட்டால் என்ன சொல்லி
சமாளிக்கலாம்? என்ற சிந்தனையோடு
உள்ளே நுழைந்தேன். சட்டென
மூலையில் உதித்ததொரு
சின்னக் காரணம்…

எழுதியவர் : ந.க.துறைவன் (18-Mar-14, 11:08 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 76

மேலே