இது உண்மையப்புள்ளி

ஆச்சரியம் ஆனால் உண்மை
அமாவாசை அழகாய் தெரிகிறது
பார்க்கும் பார்வையே குற்றமானது
கருப்பு வெறுக்கும் இனமல்ல
வெள்ளையின் மகுடம் இதுதான்
வெள்ளை காகிதத்தில் திலகம்
உண்மை பல சொல்லித்தந்தாலும்
இக்கரும் புள்ளிக்கு பின்னால்
கற்பனை கன்னியின் முகம்
கனிவாய் வந்தே செல்கிறது
புள்ளி இது கரும்புள்ளி
உன்னம்குறிக்கும் புள்ளி
இலக்கின் நிர்ணய புள்ளி
உண்மை மறைக்கும் புள்ளி
ஒற்றை தேடலின் புள்ளி
உற்று நம்மை பார்க்கவைத்து
உண்மைதனை உணர்த்தும்
உன்னதம் கூரும் புள்ளி
காண்பவர் யாவருக்கும்
தனித்தே தெரிகின்றது ,,,
தத்துவம் சொல்லும் புள்ளி
குற்றங்களை தேடுபவருக்கு
சுற்றிலுமுள்ள வென்மையது
கண் பார்வைக்கு மறைந்து
காட்சிதரும் ஒற்றைப்புள்ளி
நம் உள்ளத்தில் ஓரத்தில்
ஒளிந்திருக்கும் கரையிது
இதனை களைந்து என்றும்
குற்றம் மறந்து சுற்றத்தோடு
இன்பமாய் வாழ்ந்திடுவோம்
என்றும் உங்கள் அன்புடன்,,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...