கடவுளும், கடவுச்சொல்லும் வினோதன் மீள்
தத்தம் இதய வீட்டுக்கு
வெளித்தாழிட்டு விட்டு,
உள்ளே உட்கார்ந்துகொள்ளும்
வித்தைக்காரி பெண் !
எனக்கும் கதவுகள் உண்டு !
அவள் கண்களால்
கதவுகளை உருக்கிவிட்டு
உட்கார்ந்துகொள்கிறாள்...!
உட்கார்ந்து"கொல்"கிறாள்...!
என் இதயம் பலவீனமானதா ?
என் பலமெல்லாம் - உனை
எதிர்க்கமுடியாமல் வீணானதா ?
என்னிதயம் திறக்க - எனக்கோர்
கடவுச்சொல்கூட உண்டு !
யாரிடமும் சொல்லக்கூடாது
என்றோர் கண்டிப்புடன்
சொல்லிவிட்டுப்போனார் கடவுள்...!
என்கண் முன்னே
என்னைத்திருக்கிறாள்
அதே கடவுசொல்லுடன் !
கடவுள் கட்சி மாறியிருப்பரோ ?
என் இதயத்தின்
சன்னலோரம் அமர்ந்தென்னை
ரசிக்கிறாள், சிரிக்கிறாள், புசிக்கிறாள்...!
அவள் கண்களால் கரைத்து
நரம்பை குழலாக்கி
குடிக்கிராளேன்னை !
இறைவா...வா !
அவளிதயத்தின்
கடவுச்சொல் கற்றுக்கொடு !
இல்லையேல் - என்னிதியத்தின்
கடவுச்சொல் மறந்துவிடு !
நான் மாற்றிவிடுகிறேன்
அவள் வெளியற வழியின்றி !
- வினோதன் !