உனக்காக செதுக்கி கொண்டு இருக்கிறேன் என்னை நானே 555

என்னவளே...

உன்னை என்
மனதில் சுமந்து...

என் மனதை திறந்து
வைத்திருக்கிறேன்...

உன் வருகைக்காக...

என் இதயத்தில்
உன் பெயரை எழுதி...

உனக்கு தெரிந்த
காதல் மொழியில்...

கவிதை நூல் விரும்பி
படிக்கிறாய் நீ...

உனக்காக
எழுத ஆரமித்தேன்...

என்னை குட்டி
கவிஞன் என்கிறான்...

என் நண்பன்
எனக்கு தெரியவில்லை...

உனக்காக செதுக்கி
கொண்டு இருக்கிறேன்
என்னை நானே...

உயிரே என்னோடு
நீ இருந்தால்...

அவன் வார்த்தை
உண்மையாகி விடுமோ...

என்னவளே உன்னால்
தினம் நிறம் மாறுகிறது...

என் வெள்ளை
காகிதங்கள்...

உன்னை நினைத்தே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-Mar-14, 8:24 pm)
பார்வை : 230

மேலே