வாழ்க்கை கணக்கு

நன்மையில் தீமையை...
பிரித்து
அன்பையும் பண்பையும்
கூட்டி
அன்னையும் தந்தையும்
வகுத்து
தந்தனர் எனக்கொரு...
கணக்கு
என் ! மகளையும் மகனையும்
பெருக்கி
மனைவியை அதிலே
கழித்தேன்
நான் பூஜ்யமானேன்
என் வாழ்க்கை
சூனியமானது

எழுதியவர் : (20-Mar-14, 7:02 pm)
சேர்த்தது : கணேஸ்
Tanglish : vaazhkkai kanakku
பார்வை : 68

மேலே