-ஆசிரிய விருத்தப் பாக்கள்-சிறு குறிப்பு----01

-ஆசிரிய விருத்தம் ஆசிரியப் பாவின் ஒரு இனம்
-ஆசிரிய விருத்தம் என்றாலும் அகவல் விருத்தம் என்றாலும் இரண்டும் ஒன்றே.
-கழி நெடிலடி நான்கு ஒத்து இறின் விருத்தம்-என்கிறது யாப்பருங்கலம்;
-இந்த இடத்தில் அடிகள் பற்றிய இலக்கணத்தைச் சிறிது பார்க்கலாம்:
=குறளடி: ஓரடியில் குறைவான இரண்டு சீர்களைக் கொண்டது.;
=சிந்தடி: ஓரடியில் மூன்று சீர்களைக் கொண்டது.;
=அளவடி: ஓரடிக்கு நான்கு சீர்களைக் கொண்டது.;
=நெடிலடி: ஓரடிக்கு ஐந்து சீர்களைக் கொண்டது;
=கழி நெடிலடி: ஓரடியில் ஐந்தும், அதற்கும் மேலான சீர்களையும் கொண்டது;
-ஐந்துமுதல் நூற்றுத் தொண்ணூற்றிரண்டு சீர்கள் வரையும் வைத்துப் பாடியவர்கள் உண்டு;
-[வீரபத்திர முதலியார்-1885-இல் எழுதிய விருத்தப் பாவியல் என்றும் எழில் விருத்தம் என்று வாணிதாசனாரும் எழுதிய இரண்டையும் தவிர,]
ஆசிரிய விருத்தத்திற்கு என்று தனி இலக்கணம் காட்டும் எந்த நூலும் காணப்படவில்லை, என்பது அறிஞர்கள் கருத்து;
-ஆசிரிய விருத்தம் மரபு வழியைப் பின்பற்றியே எழுதப்படுகிறது;
-சிலப்பதிகாரம் தொடங்கி, தேவாரத்தில் நடந்து,சீவகசிந்தாமணியில் மய்யங்க்கொண்டு கார்மேகமாக உருவெடுத்தது என்றும், பிறகு கம்பர் தனது காப்பியத்தை விருத்தத்திலேயே படைத்தார் என்றும், யாப்பதிகாரம் என்னும் இலக்கண விளக்க நூலாசிரியர் புலவர் வெற்றியழகன் கூறுவார்.
-பின்னர் மரபால் ஆன கவிதை என்றால் அது அறுசீர் அல்லது எண் சீர் விருத்தம் என்ற நிலைக்கு வந்துவிட்டது என்பது அவர்தம் கூற்று.

-ஆசிரிய விருத்தம் என்றாலே கழி நெடிலடிகளில் அறுசீர் விருத்தத்திலேயே தொடங்குகிறது;
-இக்கட்டுரையில் 6 முதல் 8 சீர்களைக் கொண்ட கழி நெடிலடிகலால் அமைந்த ஆசிரிய விருத்தங்களை மட்டுமே பார்க்கப் போகிறொம்.
==== +++++ இன்னும் வரும் ====== ++++++
பின் குறிப்பு:
இக்கட்டுரையில் என்னென்ன விடயங்கள் சேர்க்கப்படுவதை விரும்புவீர்கள் என்பதைக் கருத்தில் தெரியப்படுத்தலாமே!
===== ========= ++++++ ========

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (21-Mar-14, 8:40 am)
பார்வை : 241

மேலே