இதயம் அமைதி பெற 0 தாரகை 0

காட்டிற்கு மரம்
நாட்டிற்கு கவிஞன்
நன்மையை விதைத்து தீமையை புதைக்க!

காற்றானால் புயல்
பாட்டானால் பாரதி
சிந்தனை செழிக்க வந்தனை ஒழிக்க!

பூமிக்கு விதை
புரட்சிக்கு பேனா
புதுமை பூக்க பழைமை சாய்க்க!

வில்லுக்கு அம்பு
சொல்லுக்கு அர்த்தம்
மனத்திரை கிழித்து அகச்சுடர் ஒளிர!

அறிவுக்கு புத்தகம்
ஆறுதலுக்கு கவிதை
சாக்கடை நீக்கி பூக்கடை வைக்க!

எழுதியவர் : தாரகை (21-Mar-14, 11:58 am)
பார்வை : 165

மேலே