காசேதான் கடவுளடா
பாம்பாட்டி மகுடிக்கு
மயங்காத பாம்புண்டோ
பாகனவன் கட்டுக்குள்
போகாத களிறுண்டோ ........
கொள்ளுக்கு பணியாத
குதிரைத்தான் இங்குண்டோ
குயிலினங்கள் பிறக்காத
காக்கையின் கூடுண்டோ .......
தந்திரங்கள் செய்யாமல்
நரிக்குத்தான் உணவுண்டோ
பதுங்கியே வாழாத
மான்கள்தான் இங்குண்டோ ........
வானத்தில் மேகங்கள்
நீந்தாத நாளுண்டோ
வாய்மையே தோற்காத
நாலும்தான் இங்குண்டோ .......
பணம்தான் மையமாய்
ஆனது உலகிலே
பலசெயல் வீணாய்
போகுது நம்மிலே .......
தர்மத்தை அன்றாடம்
அதர்மமோ கொல்லுது
தர்மத்தின் வழியினில்
தடைபல செய்யுது ......
நீதியை தேடியே
ஏழையோ தவிக்கிறான்
நிதி கையில் இல்லாமல்
ஏங்கியே தவிக்கிறான் ........
ஒருநாள் பொழுதிலே
எல்லாம் மாறுது
உண்மையின் நிலைகூட
தலைகீழாய் போகுது ........
காசே கடவுளாய்
ஆனது உலகிலே
கருணையின் அர்த்தமோ
மறந்தது நம்மிலே .......
தேடியே பார்க்கிறேன்
உலகம் முழுவதும்
ஒருத்தரும் தெரியல
மனிதராய் அரியல ........
காசென்னும் கடவுளுக்கு
அடிமைதான் பலருமே
சிறைக்கைதியாய் வாழ்ந்திட்டு
மடிகிறார் எவருமே ......