கஞ்சியும் கூழையும் காலம் தேடுது
கஞ்சியும் கூழையும்
உண்டு வாழ்ந்தவர்
கட்டிளம் காளையாய்
காலம் கழித்தார் ......
கூழோடு மோரும்
கூட்டுக்கு மிளகாயும்
கஞ்சிக்கு வெங்காயமும்
கடித்து கண்ட சுவையும் .......
ஊறவைத்த ஊறுகாயும்
உலரவைத்த வள்ளி வத்தலும்
கலியோடு கிளறி உன்ன
கானுதுங்கே நாக்கு சுகம் .......
கள்ளமில்லா மனமும்
கலப்படமில்லா உணவும்
கழனியில் உழைத்த உழைப்பும்
கட்டுகோப்பான உடலும் ......
நோய் நொடியில்லா வாழ்வும்
நூறினை கொண்ட வாழ்க்கையும்
இலகுவான உணவால்
இறப்புகள் கடந்த காலமும் ......
எச்சுவை உணவுகள் எவ்வளவு இருந்தும்
இச்சுவை உணவிலே இன்பமே கண்டார்
காலத்திற்கு ஏற்ப உணவினை உண்டு
காலனின் கைதுக்கு தடைகளை தந்தார் ......
உண்மையான உழைப்பாலே உடலினை பெருக்கி
பலம் மிகு தேகத்தை பற்றோடு வளர்த்தார்
பழித்திட்ட நாமோ பலநோய் பெற்று
பாதி வாழிவிலே பரலோகம் சென்றோம் ........
உணவே மருந்தென்ற உண்மையை உணர்ந்து
உன்னுவீர் எளிதான உணவினை எடுத்து
தேவையற்ற நோய்நொடி பலதை தவிர்த்து
தேடுவீர் உண்மையான வாழ்க்கையின் விதத்தை !