பெண் சிசுவின் கதறல்

பத்து மாசம் சுமந்து
பெத்து போட்டஅம்மா நீயும்
பெண் பிள்ளையாய் பிறந்து தொலைச்சேன் நானும்

ஆம்பள புள்ள தான் வேனுன்ம்னு கேக்குறையே
அது என்ன
ஆறு மாசத்துல பொறக்குதா?
அறை வயித்து கஞ்சி குடிக்குதா?

பொம்பள புள்ளைய
பெத்து வளர்க்க துப்பில்லைனா
பெட்ரூம்ல ஏண்டி விலக்கணைச்ச

மலடின்னு பேரு வாங்கி
மடி பிச்சை கேக்குறா
மடியில வந்த மகளை
நொடியில கொல்லுறா இவ

இல்லைன்னு இத்தனை பேர் இருக்காங்க
தொல்லைன்னு நெனச்சவலுக்கு
பிள்ளையா பொறக்க வச்சுட்டானே

பொண்ணா பொறந்து- பொறந்தொடனேயே
பொணமா போகனுன்னு தான் என் விதியா??

தங்கத்துல நகை வேண்டாம்
தங்கமுனு கொஞ்ச வேண்டாம்
தாலாட்டும் பாட வேண்டாம்

படுக்க ஒரு சான் எடம் போதும்
பசிக்கு ஒரு வாய் கஞ்சி போதும்
படிக்க அரசாங்க பள்ளி போதும்

தாய் பால் வேணுன்னு கேக்குல
தண்ணி பால் தந்த கூட போதும்- ஆனா
கள்ளி பால் மட்டும் வேண்டாம் அம்மா

எழுதியவர் : அருண்குமார் கிருஷ்ணசாமி (22-Mar-14, 11:45 am)
சேர்த்தது : Arunkumar Krishnasamy
பார்வை : 163

மேலே